The Voice Remains, The Light Ascends: A Tribute to the Director Imayam”
இயக்குனர் இமயம் மற்றும் இசையின் இமயம், இருவரும் தெற்கத்து திசையிலிருந்து சென்னைக்கு வந்தவர்கள்….
இங்கிருந்து எட்டுத் திசைக்கும் பரந்து வியாபித்தவர்கள், ஒருவர் ஒலியுடன் ( இசை) வருகிறார், இன்னொருவர் ஒளியுடன் ( காட்சி) வருகிறார்.
தமிழகத்தின் மண்வாசனையை திரையில், ஒலி ஒளி வடிவில் புதியவார்பை உருவாக்கியவர்கள்,
இவர்கள் இருவருக்கும், ஒலி ஒளி கட்டமைப்பை ( தொழில்நுட்பத்தை) ஒரே காலத்தில் வழங்கக்கூடி வாய்ப்பை பெற்ற ஒரே நிறுவனம் எங்கள் நிறுவனம், என்பதில் எங்களுக்கு மட்டும் பெருமை அல்ல இத்தமிழகத்திற்குப் பெருமை,
இதுபோல் பல பெருமைகளை தமிழ்த்திரைக்கு இணைந்தே வழங்கியவர்கள். இன்று ஒளிமட்டும் மண்ணிலிருந்து பிரிந்து விண்ணுக்குச் செல்கிறது என்பதும்,
இனி வான்வெளியில் ஒளி காட்சிகள் மாறப்போவதையும், வருங்கால அறிஞர்கள் கண்டு அறிவிப்பார்கள் என்பதும் எங்கள் யூகம்.
மண்ணில் உள்ளவரை தமிழுக்கும், தமிழ்த்திரைக்கும் முதல் மரியாதையை வழங்கி அழகு பார்த்த இயக்குனர் இமயத்திற்கு….இன்று தமிழகம் ஒன்றுகூடி இறுதி மரியாதையைச் செலுத்துகிறது,
என் இனிய தமிழ்மக்களே என்ற குரல், இனி விண்ணிலிருந்து தமிழ் மண்ணு வரும் என்று உங்களைப்போல் நாங்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,
இயக்குனர் இமையத்துடன் பணியாற்றிய நினைவுகளுடன்..
சு.வாசு,
மீடியா லிங்க் கான்செப்ட்ஸ்
www.medialinkconcepts.in

