Thirukkural Songs from Lydian Nathaswaram
Thirukkural Songs from Lydian Nathaswaram
மீடியா லிங்க் கான்சப்டஸ்
நிறுவனத்தின் Digital தொழினுட்பத்தின் மூலம் – 1999 ஆண்டு முதல் பல துறைகளில் பங்களித்து, சிறந்த சேவையாற்றி வருகிறோம்,
இதுவரை திரைத்துறை தொலைகாட்சித்துறை, ஊடகத்துறை, மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பயன்படுத்தி வந்த எங்களுடைய Digital தொழில்நுட்பம், இன்று மனிதக்குல வாழ்வியலுக்குப்
பயன்படப்போகிறது என்பதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
ஆம் அந்த மகிழ்ச்சி செய்தி, சிறு வயதில் உலக சாதனை படைத்த, இளம் இசை மேதை திரு.லிடியன் நாதஸ்வரம் அவர்கள், திருக்குறளின் சிறப்பையும்,மேன்மையையும், வாழ்வியல் நெறிகளையும் உலகறியச் செய்யும் விதத்தில் 1330 திருக்குறளுக்கு இசை வடிவில் 1000 பாடகர்களைக் கொண்டு பாடலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான்.
திரு.லிடியன் நாதஸ்வரம், அவர்களின் தந்தை திரு.சதீஸ் வர்ஷன் -( தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்) அவர்கள் 20 ஆண்டுகாலமாக எனக்கு நல்ல நண்பர் மற்றும் எங்கள் நிறுவனத்திற்குச் சிறந்த வாடிக்கையாளர்,

இவர்களது சிறப்பான, அர்ப்பணிப்பான, இசை சேவையைப் பாராட்டியும், 1330 திருக்குறள் இசை பாடல் விரைவில் வெளிவரவும்,
மீடியா லிங்க் கான்செபட்ஸ் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம், இத்தகவலை உங்களிடம் பகிர்வதில் பெருமையடைகிறோம்.
நன்றி.
சு.வாசு, நிறுவனர்,
மீடியா லிங்க் கான்செப்ட்ஸ்
www.medialinkconcepts.in