இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மகன்,திரு.மனோஜ் அவர்கள்
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மகன்,திரு.மனோஜ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி, தமிழகம் மட்டுமல்லாமல், உலகளவில் உள்ள திரை கலைஞர்களுக்கு, மிகுந்த வருத்தம் அளிக்கும் செய்தி, எங்களுக்கும்,எங்கள் நிறுவனத்திற்கும் பெரும் இழப்பு.
இயக்குநர் இமயமும் திரு.மனோஜ் இருவரும் எங்கள் நிறுவனத்தின் நீண்டகாலம்  வாடிக்கையாளர்கள்,
ஜெமினி பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அவர்களுடை ஒலிப்பதிவு கூடத்தை புதுப்பித்து நவீனமயமாக்கியது எங்கள் நிறுவனம், அப்பொழுது ( அன்னக்கொடி படவேலைகள் நடைபெற்று கொண்டிருந்த காலம் -2013) திரு.மனோஜ் அவர்களிடம் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது,
திரைத்துறையில் வணிகம் செய்வதும்,
அதற்கு உகந்த பணத்தை குறித்த காலத்தில் பெறுவதும் எளிதான காரியமல்ல,
ஆனால் திரு.மனோஜ் அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை எங்களோடு இணைந்து எங்கள் தொழில்நுட்பத்தைக் நன்கு கேட்டறிந்து, எங்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தி, அதற்கு உரியத் தொகையை, மிக நாணயமாகக் குறித்த நேரத்தில் எங்களுக்கு செலுத்தினார்.
அத்தருணத்தில் பாரதிராஜா அவர்களின், இரு கண்ணாக விளங்கிய, ஒரு ஒளிப்பதிவாளர் திரு.B.கண்ணன் அவர்களும் உடன் இருந்தார்கள்,
இன்று இவர், இப்பூவுலகில் இல்லை என்பதில் எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளித்தாலும், அவர்களுடைய,
ஆளுமையும், பண்பும் எங்களின் கண்முன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை,
நன்றியுடன் நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *