அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்மையில் வெளிவந்து,
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தமிழ்த் திரைப்படம் அஞ்சாமை
NEET தொடர்பான திரைப்படம் என்றாலும் நீட்டாமல், கச்சிதமாகவும் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் S.P.சுப்புராமன், கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தேர்வு அருமை,

கனமான கதை, திரைக்கதைக்கு,வசன நகர்விற்கு மேலும் பக்கபலமாக வலு சேர்ந்திருக்கிறது இசையமைப்பாளர் திரு.கலாசரண் அவர்களின் தோய்வில்லாத பின்னணி இசை மற்றும் ஒலிக்கோர்வை கட்டமைப்பு படத்திற்குச் சிறப்பு,

படப்பிடிப்பு மற்றும் படத்தோகுப்பு விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது.

எங்கள் நிறுவனம் (Media Link Concepts) கடந்த 28 ஆண்டுகளாகப் பல திரைப்பட வல்லுநர்களுக்கும், திரைப்படங்களுக்கும் ஒலி ஒளி கட்டமைப்பிற்கான தொழில்நுட்பம் மற்றும் கருவிகளையும் வழங்குவதோடு ஆலோசனைகளையும், வழங்கி சேவையாற்றி வருகிறது,

 

அருமையான இத் திரைப்படத்திற்கு எங்களின்
தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது,

அனைத்திற்கும் மேலாக இப்படத்திற்கு முதலாகவும்,
மூலதனமாகவும் விளங்குபவர் இப்படத் தயாரிப்பாளர் Dr.திருநாவுக்கரசு MD,
(மனநல மருத்துவர்), அவர்களுக்கும்,
சிறந்த திருச்சித்திரத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த Dream Warrior Pictures திரு.S.R.பிரபு அவர்களுக்கும், பாராட்டுக்கள்.

தமிழில் பேசும்படம் தொழில்நுட்பம் வந்து 93 ஆண்டுகள் ஆகிறது,
ஆனால் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் பிரச்சனையைக் கையில் எடுத்து மக்களுக்காக,மக்களிடம், பேசும்படம் – அஞ்சாமை.

திரைப்பட குழுவிற்கு வாழ்த்துக்கள் 💐💐💐

நன்றி.
சு.வாசு,
ஒலி,ஒளி தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் நிறுவனர்,
மீடியா லிங்க் கான்சப்டஸ்
www.medialinkconcepts.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *